Sunday, June 6, 2010

111

Read more...

Tuesday, June 1, 2010

படத் தொகுப்பு





Read more...

Wednesday, April 21, 2010

என்னைபற்றி

மொ.சீத்தா.ஏகாம்பரம் said...


என்னைபற்றி

மொ.சீத்தா.ஏகாம்பரம் 17ஃ5 எல் ஜி.ஜி.எஸ். நகர் திருவண்ணாமலை மாவட்டம்-606601 கைபேசி:9442455665

நான் திருவண்ணாமலை மாவட்டம் போளுர் வட்டம் மேல்ழோங்குப்பம் கிராமத்தில் முனோர்விட்டுச் சென்ற 4 எக்கர் நிலத்தில் வசித்துவருகிறேன் .பசுமைப்புரட்சி வித்திட்ட முதல் காலகட்டத்தில் நெல்வயல்களில் எண்டோசல்பான்டிடிடி எறும் பூச்சிக்கொல்லி மருந்துபயன்பாட்டுக்கு இருந்தது.அது சமயம் எனது தாய் தந்தையார் (1968 எப்ரல் 16 அன்று) இதை குடித்து என் கண் எதிரே துடித்து இறந்தனர் அப்போது எனக்கு 7 வயது

சடங்குகள் முடிந்தது. பின் பெற்றோரின் துணிமனிகளை குளத்தில் துவைத்தனார் மறுநாள் அக்குளத்தில் உள்ள மீன்கள் தவளைகள் போன்ற உயிரினங்கள் இறந்துவிட்டன.அதன்பிறகு அக்குளமும் விவசாய பயன்பாட்டிற்கு பயன் இல்லாமல் போனது.

ஆகையினால் நான் எந்தவிதமான இரசாயனமும் பயன்படுத்தாமல் இன்று வரை நான் எந்தவிதமான இரசாயனமும் பயன்படுத்தாமல் விவசாயம் செய்து வருகின்றேன் அந்தசமயம் குடியாத்தம் வழக்கறிஞர் திரு. ரவி அவர்களின் அறிமுகம் கிடைத்தது அவர்முலம் இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அறிமுகம் கிடைத்தது அவர் 1987 ஆம் ஆண்டு எனது நிலத்தை பார்வை இட்டு மண்புழு உரம் பஞ்சகவ்யா பூச்சிவிரட்டி பற்றிய பயிற்சி பாரம்பரிய விதைகள் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு முறைகளை கற்பித்தார் அன்று முதல் பண்ணைக்கு நம்மாழ்வார்பண்ணை என பெரிட்டு இன்று வரை இயற்கை விவசாயம் செய்து வருக்கின்றேன்

2003 ல் காந்தபாளையம் ப.கண்ணன் (எ) இராசாராம் பயிற்ச்சியில் திருவண்ணாமலையில் தொடங்கிய சங்கத்திற்க்கு கோ.நம்மாழ்வார் அருணோதயம் இயற்கை விவசாயிகள் மேம்பாட்டுச் சங்கம் என பெயரிட்டனர்.அன்றுமுதல் சங்கத்தின் முலம் இயற்கை விவசாயிகளின் இடுபொருள் தொழில்நுட்பம் வழங்குதல் இயற்கை உற்பத்திபொருட்களை விற்பனை வாய்ப்பு ஏற்படுத்திதருதல் போன்ற பணிகளை செய்து வருகிறேன்


வட்டபாத்தி:

ஒரு சென்ட் நிலத்தில் வட்டபாத்தியின் முலம் 27 வகையான காய்கறிகள் ஆடிப்பட்டத்தில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யலாம். அதுகுறித்து எல்லா வகையான விளக்கமும் தொழில்நுட்பமும் எடுக்கப்படும்

மாதந்தோறும் இயற்கை விவசாயம் சார்ந்த தொழில்நுட்ப பயிற்சி இயற்கை விவசாயிகளின் பண்ணைகளின் நடைபெறுகிறது…..

என்னைபற்றி

மொ.சீத்தா.ஏகாம்பரம் 17ஃ5 எல் ஜி.ஜி.எஸ். நகர் திருவண்ணாமலை மாவட்டம்-606601 கைபேசி:9442455665

நான் திருவண்ணாமலை மாவட்டம் போளுர் வட்டம் மேல்ழோங்குப்பம் கிராமத்தில் முனோர்விட்டுச் சென்ற 4 எக்கர் நிலத்தில் வசித்துவருகிறேன் .பசுமைப்புரட்சி வித்திட்ட முதல் காலகட்டத்தில் நெல்வயல்களில் எண்டோசல்பான்டிடிடி எறும் பூச்சிக்கொல்லி மருந்துபயன்பாட்டுக்கு இருந்தது.அது சமயம் எனது தாய் தந்தையார் (1968 எப்ரல் 16 அன்று) இதை குடித்து என் கண் எதிரே துடித்து இறந்தனர் அப்போது எனக்கு 7 வயது

சடங்குகள் முடிந்தது. பின் பெற்றோரின் துணிமனிகளை குளத்தில் துவைத்தனார் மறுநாள் அக்குளத்தில் உள்ள மீன்கள் தவளைகள் போன்ற உயிரினங்கள் இறந்துவிட்டன.அதன்பிறகு அக்குளமும் விவசாய பயன்பாட்டிற்கு பயன் இல்லாமல் போனது.

ஆகையினால் நான் எந்தவிதமான இரசாயனமும் பயன்படுத்தாமல் இன்று வரை நான் எந்தவிதமான இரசாயனமும் பயன்படுத்தாமல் விவசாயம் செய்து வருகின்றேன் அந்தசமயம் குடியாத்தம் வழக்கறிஞர் திரு. ரவி அவர்களின் அறிமுகம் கிடைத்தது அவர்முலம் இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அறிமுகம் கிடைத்தது அவர் 1987 ஆம் ஆண்டு எனது நிலத்தை பார்வை இட்டு மண்புழு உரம் பஞ்சகவ்யா பூச்சிவிரட்டி பற்றிய பயிற்சி பாரம்பரிய விதைகள் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு முறைகளை கற்பித்தார் அன்று முதல் பண்ணைக்கு நம்மாழ்வார்பண்ணை என பெரிட்டு இன்று வரை இயற்கை விவசாயம் செய்து வருக்கின்றேன்

2003 ல் காந்தபாளையம் ப.கண்ணன் (எ) இராசாராம் பயிற்ச்சியில் திருவண்ணாமலையில் தொடங்கிய சங்கத்திற்க்கு கோ.நம்மாழ்வார் அருணோதயம் இயற்கை விவசாயிகள் மேம்பாட்டுச் சங்கம் என பெயரிட்டனர்.அன்றுமுதல் சங்கத்தின் முலம் இயற்கை விவசாயிகளின் இடுபொருள் தொழில்நுட்பம் வழங்குதல் இயற்கை உற்பத்திபொருட்களை விற்பனை வாய்ப்பு ஏற்படுத்திதருதல் போன்ற பணிகளை செய்து வருகிறேன்


வட்டபாத்தி:

ஒரு சென்ட் நிலத்தில் வட்டபாத்தியின் முலம் 27 வகையான காய்கறிகள் ஆடிப்பட்டத்தில் இயற்கை முறையில் உற்பத்தி செய்யலாம். அதுகுறித்து எல்லா வகையான விளக்கமும் தொழில்நுட்பமும் எடுக்கப்படும்

மாதந்தோறும் இயற்கை விவசாயம் சார்ந்த தொழில்நுட்ப பயிற்சி இயற்கை விவசாயிகளின் பண்ணைகளின் நடைபெறுகிறது…..

Read more...

அங்ககச் சான்றிதழ்

திருவண்ணாமலை :

இயற்கை வேளாண்மை புரிவோர் அங்ககச் சான்றிதழ் பெற வலியுறுத்தல் :
திருவண்ணாமலை, : இயற்கை வேளாண்மை புரிவோர் கண்டிப்பாக அங்ககச் சானறிதழ் பெற வேண்டும் என கோவை வேளாண் பல்கலைக்கழக அங்ககச் சான்றளிப்பு துறை அலுவலர் பி.ரபியுல்லா கூறினார்.திருவண்ணாமலை மாவட்டக் கூட்டுறவு ஒன்றியம், கிரிப்கோ நிறுவனம் சார்பில் செங்கம் அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீ சக்தி பாலிடெக்னிக்கில் இயற்கை வேளாண்மை கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ரபியுல்லா பேசியது: விவசாயிகள் அதிகளவில் பூச்சிகொல்லி மருந்துகளை பயன்படுத்தியதால் நிலங்கள் அனைத்து விஷமாகி விட்டன.அதிக மகசூல் கிடைக்கும் என இத்தனை நாள்களாக ரசாயன உரங்களைப் பயன்படுத்தி வந்தோம். இதனால் மண் தனது தன்மையை இழந்து விட்டது. மண் வளமாக இருந்தால்தான் மகசூல் அதிகரிக்கும். கரிமச் சத்து குறைவாக இருப்பதால் நிலங்கள் பாதிப்படைகின்றன. இயற்கை விவசாயம் செய்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும். நிலத்தின் தன்மையும் பாதுகாகப்படும். மண்புழு உரம், நுண்ணுயிர் இடுபொருள்கள், உரங்கள், பூசணக்கொல்லிகள், மூலிகை பூச்சி விரட்டிகள், இயற்கை எரு, போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இயற்கை விவசாயம் செய்வோர் கண்டிப்பாக அங்ககச் சான்றிதழ் பெற வேண்டும். தனிநபராகவோ, கூட்டாகவோ, அல்லது ஒரு நிறுவனமாகவோ பதிவு செய்யலாம். விண்ணப்பப் படிவம், பண்ணையின் பொது விவரம், பண்ணை வரைபடம், மண் மறறும் பாசனநீர் பரிசோதனை விவரம், ஆண்டு பயிர்திட்டம், துறையுடன் ஒப்பந்தம், ஆகியவற்றை மூன்று நகல்களில் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அங்கக சான்றளிப்பு இயக்குநர், தடாகம் சாலை, ஜிசிடி அஞ்சல், கோவை-13, தொலைபேசி-0422-2435080-ஐ அணுகலாம் என்றார் ரபியுல்லா

Read more...

பஞ்சகவ்யம்

இயற்கை விவசாயம் வெகு லாபகரமானதே, அதில் அதிகம் பயன்படும் ஒரு இயற்கை நோய் எதிர்ப்பு, வளர்ச்சி ஊக்கி பஞ்சகவ்யம் .இதனால் உற்பத்தி திறனும் அதிகரிக்கிறது .அதனை தயாரிப்பதை எப்படி என்று பார்ப்போம்!

பஞ்சகவ்யம் என்றால் பசுவிடம் இருந்து பெறப்படும் 5 மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுவது.
அவை!
1)சாணம்
2) கோமியம்
3) பால்
4) நெய்
5) தயிர்

இவை ஐந்தையும் சரியான விதத்தில் கலந்து தயாரிக்கபடுவதே பஞ்சகவ்யம் இது ஆயுர் வேத வைத்தியம் , பயிர் வளர்ப்பு இரண்டிலும் பயன்படுகிறது.

மேலும் சில மூலப்பொருட்களை சேர்த்து இதன் திறனை அதிகரித்து இயற்கை விவசாயத்தில் தற்போது பயன்படுத்துகிறார்கள்.

மேம்படுத்தப்பட்ட பஞ்சகவ்யம் செய்யும்முறை:

மூலப்பொருள்:

*4 கிலோ சாண எரிவாயு கலனில் இருந்து பெறப்பட்ட சாணக்கூழ்
*1 கிலோ புதிய சாணம்
*3 லிட்டர் கோமியம்
*2 லிட்டர் பசும்பால்
*2 லிட்டர் பசு தயிர்
*1 லிட்டர் பசு நெய்
*3 லிட்டர் கரும்பு சாறு!
*12 பழுத்த வாழைப்பழம்
*3 லிட்டர் இளநீர்
*2 லிட்டர் தென்னம் கள்

இவை அனைத்தையும் வாய் அகன்ற மண்கலம் , அல்லது சிமெண்ட் தொட்டியில் விட்டு நன்றாக கலக்கவும். கலக்கப்போவது யாரு நாமளாச்சே கலக்கிட மாட்டோம்!

தொட்டியை மூடாமல் இதனை நிழலில் ஒரு வாரம் வைத்து இருக்க வேண்டும், தினசரி காலையும் மாலையும் ஒரு முறை கலக்கி விட வேண்டும்!

ஒரு வாரத்திற்கு பின் 20 லிட்டர் பஞ்சகவ்யம் தயார். இதில் ஒரு லிட்டர் எடுத்து அதனை 100 லிட்டர் தண்ணீரில் கலந்தால் 3 சதவீத அடர்த்தியுள்ள பஞ்ச கவ்யம் கிடைக்கும் அது ஒரு ஏக்கருக்கு தெளிக்க போதும்.

மேலும் விதைகளை நாற்றாங்களில் விதைக்கும் முன் 30 நிமிடம் பஞ்சகவ்ய கரைசலில் ஊரவைத்து விதை நேர்த்தி செய்தால் நாற்றுகள் நன்கு வளரும் நெல்லும் அதிகம் தூர்கட்டும்!

பஞ்ச கவ்யம் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கி, வளர்ச்சி ஊக்கி! இதனை தெளித்தால் மட்டும் போதும் மேற்கொண்டு எந்த பூச்சி மருந்தும் அடிக்க வேண்டாம் வயலுக்கு!

பஞ்ச கவ்யம் தெளித்த பிறகு மேலும் அதிக பலன் கிடைக்க தேங்காய் பால், மோர் கலந்து அதை ஒரு லிட்டருக்கு 10 லிட்டர் தண்ணீர் செர்த்து வயலுக்கு தெளித்தால் கூடுதல் வளர்ச்சி கிடைக்கும்.

Read more...

இயற்கை விவசாயம் அதிகரிக்கும்

இயற்கையான முறையில் விவசாய செய்யும் பரப்பளவு 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கும்

இரசாயண உரம், பூச்சி மருந்து போன்றவைகளை பயன்படுத்தாமல், பஞ்சகாவ்யம், வேம்பு போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்டும் விவசாய முறை மீண்டும் முக்கியத்துவம் பெற்று வருகிறது.

இந்தியாவில் மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளிலும் இயற்கை வேளாண்மைக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இரசாயண பொருட்கள் பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படும் காய்கறி, பழங்கள், தேயிலே, காபி, உணவு தானியங்கள் உட்பட எல்லாவித பொருட்களுக்கு அதிக விலையும் கிடைக்கிறது. தற்போது இந்தியாவில் இருந்து இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை போன்றவை ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இவைகள் ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்பும் உள்ளது.

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் இன்டர்நேஷனல் கான்பிடென்ஸ் சென்டர் பார் ஆர்கானிக் அக்ரிகல்சர் என்ற அமைப்பின் தலைவர் முகேஷ் குப்தா கூறுகையில், இந்தியாவில் 8 லட்சத்து 65 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் இயற்கை முறையிலான விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரப்பளவு 2012 ஆம் ஆண்டில் 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கும் என்றார்.

இயற்கை வேளாண் பொருட்களுக்கு வரவேற்பு வருடத்திற்கு வருடம் இரு மடங்கு அதிகரித்துவருகிறது. அடுத்த சில வருடங்களில் இதன் விற்பனை 6 முதல் 7 மடங்காக அதிகரிக்கும். மக்களிடையே விழிப்புணர்ச்சி அதிகரிக்கும் போது, 2012 ஆம் ஆண்டில் இதன் வர்த்தகம் ரூ.4 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்.

இந்தியாவில் 14 கோடியே 20 லட்சம் நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

Read more...

Saturday, April 10, 2010

organic



Read more...

Friday, March 26, 2010

வீடியோ Videos

தேனீ வளர்ப்பு (வீடியோ)



வேலம்பாடி, கரூர் மாவட்டம்.

Read more...

பருத்தி சாகுபடி அதிக மகசூல் பெற ஆலோசனை


கோடை பருவத்தில் பருத்தி சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது குறித்து ஸ்ரீவி்ல்லிபுதூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய முதல்வர் ராமலிங்கம் ஆலோசனை தெரிவித்துள்ளார்.


இது குறித்த அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோடை பருவத்தில் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் சம வயதுள்ள ரகத்தை தேர்ந்தெடுத்து ஒரு வாரத்திற்குள் விதைக்க வேண்டும். பூச்சி நோய் தாங்கி வளர வல்ல எஸ்விபிஆர்2 ரகத்தை தேர்ந்தெடுத்து பயிரிடலாம். சாணிப்பால் கொண்டு விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தவும். விதைப்பிற்கு முன் ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் சூடோமோனஸ் புளூரோசன்ஸ் பயன்படுத்தி விதைக்க வேண்டும். காற்றடிக்கும் திசைக்கு குறுக்காக பார்கள் அமைத்து விதைத்து, வயலை சுற்றியுள்ள செடிகள், களைகளை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும். தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு போடுவது பூச்சி, நோய் தாக்குதலை குறைக்கும். விதைத்த 30வது நாளில் சூடோமோனாஸ் புளூரோசன்ஸ் ஏக்கருக்கு ஒரு கிலோ இட வேண்டும். நட்ட 20, 30 நாள்களில் வேப்ப எண்ணைய் ஒரு சதம் கரைசல் தூரில் ஊற்ற வேண்டும்.



ஊடு பயிராக வாய்க்கால்கள், பாத்தி வரப்புகளின் ஓரங்களில் தட்டைப்பயிறு வளர்த்தால் பொறி வண்டுகள் பெருக்கத்திற்கு துணை புரியும். மேலும் பூச்சியின் வருகையை கண்காணிக்க ஊடு பயிராக மக்காசோளம், உளுந்து, சீனி அவரை ,ஓரப்பயிராக ஆமணக்கு, சூரிய காந்தி பயிரிட வேண்டும். உளுந்து ஊடு பயிராக பயிரிடுவதால் தத்துப்பூச்சி தாக்குதல் குறையும். சீனி அவரை ஊடு பயிராக பயிரிட்டால் தத்துப்பூச்சி, காய்ப்புழு தாக்குதல் குறையும்.



பயிறு வகை ஊடுபயிர் மூலம் வேர் முடிச்சுகளில் தழைச்சத்து உற்பத்தி செய்யப்பட்டு மண்ணின் வளம் மேம்படுகிறது. ஆமணக்கு புரடீனியா புழு தாய்ப்பூச்சிகள் முட்டையிட கவர்ந்திழுக்கும். வாய்க்கால்களில் மக்கா சோளம் பயிரிட்டால் கிரைசோப்பா, குளவிகள் போன்ற நன்மை தரும் பூச்சிகள் பெருக்கத்திற்கு துணை புரியும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்

Read more...

நெற்பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறை

மாவட்டம் புதுக்கோட்டை வட்டாரத்தில் நெற்பயிர் சுமார் 700 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் படைப்புழுக்களின் தாக்குதலை கட்டுபடுத்தும் வழிறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது நெற்பயிர் கதிர்வெளிவரும் நிலையிலும் பூக்கும் பருவத்திலும், பால்பிடிக்கும் பருவத்திலும், அறுவடை பருவத்திலும் உள்ளது. இத்தருணத்தில் நெற்பயிரில் ஆங்காங்கே படைப்புழு தாக்குதல் காணப்படுகிறது. இதனால் வயல் முழுவதும் கடும்பாதிப்புக்குள்ளாகும். ஒரு புழு 15 நாள் முதல் 24 நாட்கள் வாழும். இப்புழுக்கள் இளம் புழு பருவத்தில் பச்சை நிறத்திலும், வளர வளர பழுப்பு நிறத்திலும் ஓரங்களில் வெளிறிய கோடுகளும் இருக்கும். சில நேரங்களில் பச்சை நிறத்திலும் காணப்படும். எனவே கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை மாலை வேலையில் ஒரு ஏக்கருக்கு எண்டோசல்பான் 300 மிலி அல்லது குளோர்பைரிபாஸ் 500 மிலி தெளிக்க வேண்டும். இவ்வாறு புதுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Read more...

தென்னைக்கு சொட்டுநீர்ப் பாசனம்


தென்னைக்கு சொட்டுநீர்ப் பாசனம்

தென்னைக்கு சொட்டுநீர்ப் பாசனம்: அதிக இடைவெளி கொண்ட தென்னை போன்ற நீண்டகால பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் ஒரு சிறந்த பாசன முறையாகும். தென்னை பொதுவாக 7.5 மீட்டர் ஙீ 7.5 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது.
இவ்வாறு நடவு செய்யப்படும் தென்னைக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க பக்கவாட்டு குழாய்களை 7.5 மீட்டர் இடைவெளியில் அடைத்து மரம் ஒன்றுக்கு மணிக்கு 8 லிட்டர் பாசன நீர் வெளியேறக்கூடிய சொட்டுவான்கள் நான்கைப் பொருத்தினால் சிறப்பான முறையில் சொட்டுநீர்ப் பாசனம் மேற்கொள்ளமுடியும்.
4 சொட்டுவான்களில் 2ஐ மரத்தின் அருகாமையில் குறிப்பிட்ட இடைவெளியில் பக்கவாட்டுக் குழாய்களில் இணைக்க வேண்டும். மற்ற 2 சொட்டுவான்களையும் பக்கவாட்டுக் குழாயுடன் இணைக்கப் பட்ட நுண்குழாயில் பொருத்தி ஏற்கனவே உள்ள சொட்டுவான்களுக்கு இணையாக சீரான இடைவெளியில் இருக்குமாறு அமைக்கலாம்.
இவ்வாறு 4 சொட்டுவான்களும் மரத்தைச் சுற்றி சரியான இடைவெளியில் இருக்குமாறு அமைப்பதால் பாசன நீர் சீராக எல்லா மரத்திற்கும் கிடைக்க ஏதுவாகும். சொட்டுநீர் பாசனத்தில் தென்னையின் நீர்த்தேவை, தட்பவெப்ப நிலை மற்றும் பருவநிலையைப் பொறுத்து இடத்திற்கு இடம் வேறுபடும்

நீர்வளம் நிறைந்த பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் மூலம் அதிகபட்ச மகசூல் பெற பரிந்துரை செய்யப்படும் அளவாகும். ஒவ்வொரு பருவத்திற்கும் பாசன நேரத்தை நிர்ணயிப்பதன் மூலம் தேவைப்படும் சரியான அளவு நீரை மரத்திற்கு அளிக்கலாம். உதாரணமாக மணிக்கு 8 லிட்டர் நீர் வெளியேற்றும் 4 சொட்டுவான்கள் மூலம் மரம் ஒன்றுக்கு தினமும் 65 லிட்டர் பாசனம் செய்ய தேவைப்படும் பாசன நேரம் 2 மணி நேரமாகும். இவ்வாறு ஒவ்வொரு பாசன அளவிற்கும் பாசன நேரத்தைக் கணக்கிட்டு அதன்படி சரியான அளவு நீரை மரத்திற்கு அளிக்கலாம். மேற்பரப்பு பாசன முறையுடன் ஒப்பிடும் போது சொட்டு நீர்ப்பாசனத்தில் 70 சதம் பாசன நீர் சேமிப்பு கிடைக்கும்.

Read more...

படத் தொகுப்பு































































































Read more...

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP