இயற்கை விவசாயம் அதிகரிக்கும்
இயற்கையான முறையில் விவசாய செய்யும் பரப்பளவு 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கும் இரசாயண உரம், பூச்சி மருந்து போன்றவைகளை பயன்படுத்தாமல், பஞ்சகாவ்யம், வேம்பு போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்டும் விவசாய முறை மீண்டும் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் ஐரோப்பிய நாடுகளிலும் இயற்கை வேளாண்மைக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இரசாயண பொருட்கள் பயன்படுத்தாமல் உற்பத்தி செய்யப்படும் காய்கறி, பழங்கள், தேயிலே, காபி, உணவு தானியங்கள் உட்பட எல்லாவித பொருட்களுக்கு அதிக விலையும் கிடைக்கிறது. தற்போது இந்தியாவில் இருந்து இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை போன்றவை ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இவைகள் ஏற்றுமதி செய்ய அதிக வாய்ப்பும் உள்ளது. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் இன்டர்நேஷனல் கான்பிடென்ஸ் சென்டர் பார் ஆர்கானிக் அக்ரிகல்சர் என்ற அமைப்பின் தலைவர் முகேஷ் குப்தா கூறுகையில், இந்தியாவில் 8 லட்சத்து 65 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் இயற்கை முறையிலான விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரப்பளவு 2012 ஆம் ஆண்டில் 20 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கும் என்றார். இயற்கை வேளாண் பொருட்களுக்கு வரவேற்பு வருடத்திற்கு வருடம் இரு மடங்கு அதிகரித்துவருகிறது. அடுத்த சில வருடங்களில் இதன் விற்பனை 6 முதல் 7 மடங்காக அதிகரிக்கும். மக்களிடையே விழிப்புணர்ச்சி அதிகரிக்கும் போது, 2012 ஆம் ஆண்டில் இதன் வர்த்தகம் ரூ.4 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும். இந்தியாவில் 14 கோடியே 20 லட்சம் நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. |
0 comments:
Post a Comment