Friday, March 26, 2010

வீடியோ Videos

தேனீ வளர்ப்பு (வீடியோ)



வேலம்பாடி, கரூர் மாவட்டம்.

Read more...

பருத்தி சாகுபடி அதிக மகசூல் பெற ஆலோசனை


கோடை பருவத்தில் பருத்தி சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது குறித்து ஸ்ரீவி்ல்லிபுதூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய முதல்வர் ராமலிங்கம் ஆலோசனை தெரிவித்துள்ளார்.


இது குறித்த அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோடை பருவத்தில் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் சம வயதுள்ள ரகத்தை தேர்ந்தெடுத்து ஒரு வாரத்திற்குள் விதைக்க வேண்டும். பூச்சி நோய் தாங்கி வளர வல்ல எஸ்விபிஆர்2 ரகத்தை தேர்ந்தெடுத்து பயிரிடலாம். சாணிப்பால் கொண்டு விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தவும். விதைப்பிற்கு முன் ஒரு கிலோ விதைக்கு பத்து கிராம் சூடோமோனஸ் புளூரோசன்ஸ் பயன்படுத்தி விதைக்க வேண்டும். காற்றடிக்கும் திசைக்கு குறுக்காக பார்கள் அமைத்து விதைத்து, வயலை சுற்றியுள்ள செடிகள், களைகளை அகற்றி சுத்தமாக வைக்க வேண்டும். தொழு உரம், வேப்பம் புண்ணாக்கு போடுவது பூச்சி, நோய் தாக்குதலை குறைக்கும். விதைத்த 30வது நாளில் சூடோமோனாஸ் புளூரோசன்ஸ் ஏக்கருக்கு ஒரு கிலோ இட வேண்டும். நட்ட 20, 30 நாள்களில் வேப்ப எண்ணைய் ஒரு சதம் கரைசல் தூரில் ஊற்ற வேண்டும்.



ஊடு பயிராக வாய்க்கால்கள், பாத்தி வரப்புகளின் ஓரங்களில் தட்டைப்பயிறு வளர்த்தால் பொறி வண்டுகள் பெருக்கத்திற்கு துணை புரியும். மேலும் பூச்சியின் வருகையை கண்காணிக்க ஊடு பயிராக மக்காசோளம், உளுந்து, சீனி அவரை ,ஓரப்பயிராக ஆமணக்கு, சூரிய காந்தி பயிரிட வேண்டும். உளுந்து ஊடு பயிராக பயிரிடுவதால் தத்துப்பூச்சி தாக்குதல் குறையும். சீனி அவரை ஊடு பயிராக பயிரிட்டால் தத்துப்பூச்சி, காய்ப்புழு தாக்குதல் குறையும்.



பயிறு வகை ஊடுபயிர் மூலம் வேர் முடிச்சுகளில் தழைச்சத்து உற்பத்தி செய்யப்பட்டு மண்ணின் வளம் மேம்படுகிறது. ஆமணக்கு புரடீனியா புழு தாய்ப்பூச்சிகள் முட்டையிட கவர்ந்திழுக்கும். வாய்க்கால்களில் மக்கா சோளம் பயிரிட்டால் கிரைசோப்பா, குளவிகள் போன்ற நன்மை தரும் பூச்சிகள் பெருக்கத்திற்கு துணை புரியும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்

Read more...

நெற்பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறை

மாவட்டம் புதுக்கோட்டை வட்டாரத்தில் நெற்பயிர் சுமார் 700 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் படைப்புழுக்களின் தாக்குதலை கட்டுபடுத்தும் வழிறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது நெற்பயிர் கதிர்வெளிவரும் நிலையிலும் பூக்கும் பருவத்திலும், பால்பிடிக்கும் பருவத்திலும், அறுவடை பருவத்திலும் உள்ளது. இத்தருணத்தில் நெற்பயிரில் ஆங்காங்கே படைப்புழு தாக்குதல் காணப்படுகிறது. இதனால் வயல் முழுவதும் கடும்பாதிப்புக்குள்ளாகும். ஒரு புழு 15 நாள் முதல் 24 நாட்கள் வாழும். இப்புழுக்கள் இளம் புழு பருவத்தில் பச்சை நிறத்திலும், வளர வளர பழுப்பு நிறத்திலும் ஓரங்களில் வெளிறிய கோடுகளும் இருக்கும். சில நேரங்களில் பச்சை நிறத்திலும் காணப்படும். எனவே கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை மாலை வேலையில் ஒரு ஏக்கருக்கு எண்டோசல்பான் 300 மிலி அல்லது குளோர்பைரிபாஸ் 500 மிலி தெளிக்க வேண்டும். இவ்வாறு புதுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Read more...

தென்னைக்கு சொட்டுநீர்ப் பாசனம்


தென்னைக்கு சொட்டுநீர்ப் பாசனம்

தென்னைக்கு சொட்டுநீர்ப் பாசனம்: அதிக இடைவெளி கொண்ட தென்னை போன்ற நீண்டகால பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் ஒரு சிறந்த பாசன முறையாகும். தென்னை பொதுவாக 7.5 மீட்டர் ஙீ 7.5 மீட்டர் இடைவெளியில் நடவு செய்ய பரிந்துரை செய்யப்படுகிறது.
இவ்வாறு நடவு செய்யப்படும் தென்னைக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க பக்கவாட்டு குழாய்களை 7.5 மீட்டர் இடைவெளியில் அடைத்து மரம் ஒன்றுக்கு மணிக்கு 8 லிட்டர் பாசன நீர் வெளியேறக்கூடிய சொட்டுவான்கள் நான்கைப் பொருத்தினால் சிறப்பான முறையில் சொட்டுநீர்ப் பாசனம் மேற்கொள்ளமுடியும்.
4 சொட்டுவான்களில் 2ஐ மரத்தின் அருகாமையில் குறிப்பிட்ட இடைவெளியில் பக்கவாட்டுக் குழாய்களில் இணைக்க வேண்டும். மற்ற 2 சொட்டுவான்களையும் பக்கவாட்டுக் குழாயுடன் இணைக்கப் பட்ட நுண்குழாயில் பொருத்தி ஏற்கனவே உள்ள சொட்டுவான்களுக்கு இணையாக சீரான இடைவெளியில் இருக்குமாறு அமைக்கலாம்.
இவ்வாறு 4 சொட்டுவான்களும் மரத்தைச் சுற்றி சரியான இடைவெளியில் இருக்குமாறு அமைப்பதால் பாசன நீர் சீராக எல்லா மரத்திற்கும் கிடைக்க ஏதுவாகும். சொட்டுநீர் பாசனத்தில் தென்னையின் நீர்த்தேவை, தட்பவெப்ப நிலை மற்றும் பருவநிலையைப் பொறுத்து இடத்திற்கு இடம் வேறுபடும்

நீர்வளம் நிறைந்த பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் மூலம் அதிகபட்ச மகசூல் பெற பரிந்துரை செய்யப்படும் அளவாகும். ஒவ்வொரு பருவத்திற்கும் பாசன நேரத்தை நிர்ணயிப்பதன் மூலம் தேவைப்படும் சரியான அளவு நீரை மரத்திற்கு அளிக்கலாம். உதாரணமாக மணிக்கு 8 லிட்டர் நீர் வெளியேற்றும் 4 சொட்டுவான்கள் மூலம் மரம் ஒன்றுக்கு தினமும் 65 லிட்டர் பாசனம் செய்ய தேவைப்படும் பாசன நேரம் 2 மணி நேரமாகும். இவ்வாறு ஒவ்வொரு பாசன அளவிற்கும் பாசன நேரத்தைக் கணக்கிட்டு அதன்படி சரியான அளவு நீரை மரத்திற்கு அளிக்கலாம். மேற்பரப்பு பாசன முறையுடன் ஒப்பிடும் போது சொட்டு நீர்ப்பாசனத்தில் 70 சதம் பாசன நீர் சேமிப்பு கிடைக்கும்.

Read more...

படத் தொகுப்பு































































































Read more...

  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008

Back to TOP